Tuesday, November 27, 2018

துரோகத்தின் துரோகியர்.

சாக்கடை புழுக்களை
சாமியார் என்றும்,
சகதியில், விதி செய்யும்
விவசாயியை
தாழ்ந்தவர் என்றும்,
போக்கணம்
கெட்ட பேசுவோர்
பூமியில்
துரோகத்தின்
துரோகியர்!

வேர்க்கவும், உடல்
உக்கவும், வீதியில்
நின்று வெயில் குடித்து
தரை துடைக்கும்,
கூலியாளை,
குறை கூறி ஒதிக்கிடும் பாவியர், பயனற்ற
துரோகத்தின் துரோகியர்!

காகித தாழ்களில்,
நிறத் தரவுகள்
 இட்டதால் - அதை
அதிகமே பெற்றதால்,
கால் வயிற்று கஞ்சிக்கு,
நேர்மையில் நின்றிடும்
ஏழ்மையை மதித்திடா,
மமதைகள் யாவுமே - மதி
கெட்ட துரோகத்தின்
துரோகியர்!

ஆள்பவன் என்றும்,
அடைக்கலம் கேட்பவன்
என்றும், ஏளனம் செய்து,
தாழ்களை வீசி, தனக்குள்ளே அடக்கும்
யாவரும், துரோகத்தின்
துரோகியர்!

வெறுத்திடும் ஒன்றை,
மறுத்திடும் அதனுடன்,
இணைத்திடச் செய்யும்,
மாந்திரீகம், மந்திர வாத
துரோகத்தின்,
துரோகியர்!

பாசங்கள் கடந்து,
பணப் புதையலில்
புதைந்து, நேசங்கள்
தொலைத்து, காமத்தில்
குளிக்கும், யாவரும்.
மானிட வாழ்வியல்
துரோகத்தின்,
துரோகியர்!

நான், எனும்,
ஆங்காரத்தில்.
நாம் எனும், ஒற்றுமை
மறந்த கோவேறு
யாவுமே' மண்ணின்
மீது மா பெரும்
துரோகியர்!

நட்பிலே நுழைந்து,
கற்பிலே கறை பூச,
கற்பனை செய்தும்,
கட்சிதம் செய்தும்,
சமத்துவம் மறந்த யாவரும்,
பெண்மையின் துரோகத்தின்
துரோகியர்!

சொல்லலாம், இன்னும்
கோடி துரோகங்கள்.
சொல்லி மாறும் என்றால்.
மாறாது என்றறிந்தும்
மனம் பொறுக்காமல்
சொல்லிச் செல்கிறேன்
இத்தனை துரோகங்களை!

               

No comments:

Post a Comment