Tuesday, November 27, 2018

தமிழ் மறந்த தமிழர்கள்


சித்தனைக் கண்டேன்,
பித்தனைக் கண்டேன்,
தமிழ் புத்தகம் 
கொண்டே!

தமிழர் புத்தியில் 
நின்றும் செத்திடும்,
தமிழ் கண்டு அழுதேன்!



அம்மா, என்று 
உதடுகள் 
பிணைக்கையில்
அடி மனதில் பாசம்
கொண்டு ஆழும் 
தமிழ், இன்று மம்மி
என்று மகுடி ஊதுவது 
கண்டு, அழுதேன்!

வைரமுத்து வென்றெடுத்த
சிந்து தமிழ் எங்கே?

வாலியவர் கொஞ்சி 
நின்ற கொஞ்சு தமிழ்
எங்கே?

பாரதியின் 
பாட்டுத் தமிழ் எங்கே? 
இந்தப்
பாவியர் பூட்டி வைத்தார்
எங்கோ!



ஈழத்து தேங்காயும்,
சேலத்து மாங்காயும்,
ஏலத்திற்காய் காத்து
நிற்பதில்லை, 
தோழா.....
உங்கள் 
கோக்கனைட்,மங்கோ
போன்று......
என்றுமே நாங்கள் 
விற்றிடாத் தமிழ்,
வெற்றி முரசு, 
கொட்டிடும் தமிழ்!

வெள்ளையனை 
வீரம் கொண்டு
விரட்டிய தமிழா இன்று
உன் வெற்றிலைக்கு 
சுண்ணாம்பு ஆங்கிலமா?



சாதத்தில் 
சாம்பாறிட்டு
உண்ட நிலாச் சோறும்,
அதில் கண்ட 
அம்மாவின் அன்பும்,
டைனிங் டேபிளுக்கும்,
ஸ்பூனுக்கும், 
சிறையானதென்ன!

நான்' தமிழன் என்று
வீரம் கொண்டெழுந்த
வேங்கைகள் தந்த
வாரிசுகளே, 
ஆங்கிலேயர் 
அளவுக்கும், 
தமிழ் நுழைவதில்லையே
உங்கள் நாவுகளில்!



ஆந்தைக்கு ஒப்பான 
சாமான்யவான்களே'
ஆடிப் பெருக்கு வரும்
அலையில் கழுவுங்கள்,
உங்கள் நாவுகளை,
ஆங்கிலத்தின் 
துர் நாற்றம் 
அங்கலாய்க்கிறது 
உங்கள் நாவுகளில்!



எண் திசைகளும்
தமிழ் எனும் 
சுவை வேண்டும், 
எடுத்தியம்புங்கள் 
என் தாய் மொழியை
பாமரனும் பாடி மகிழ!

தமிழ் கொண்ட 
தாழாத வாசம்
தலை மகுடம் 
சூடுமா இனியாவது, 
விடுகை பெறுமா 
இதயங்கள் தமிழுக்காய்!

No comments:

Post a Comment