Friday, November 23, 2018

யூகித்துப்பார் மனிதா


வலைத்தளங்களில்
வாழ்வு கொள்ளும்
மானிடனே.....
சிலைக்கற்களாய்
போனதென்ன
மனிதம்!

இசைத் திடல்களாய்
ஒலி எழுப்பும்
இதயங்களே....
ஈன இன்பத்தில்
ஊனம் கொண்டதென்ன
உம் இதயம்!

பெருங் கடல்களாய்த்
திரழும், உறவுச்
சிற்பங்களே'
வலையமைப்பினுள்
பூட்டி வைத்ததென்ன
நம் உறவை!


கருணைக்கு
காதல் என்று
பெயர் சூட்டும்
எஜமான்களே,
காமத்தை காதலின்
அத்திவாரமாக்கிக்
கொண்டதென்ன லீலை!

கம்பன் ஒரு கவி
சொன்னான், காதலைப்
போற்றி இன்று
 வம்பர்கள் ஒரு
வகை சொன்னர்
காதலை மாய்த்து!


கறுப்பழகன்,வைரமுத்து காதலித்துப்பார்,
என்றான் கருணை வர,
காதலிக்கின்றோம்,
உறவுகளை அல்ல,
வலையங்களை!

சத்தியத்தில் எச்சில்,
பூசி நுணி நாக்கில்
வைத்துக்கொண்டு,
சாகசம் செய்வார்
பேடைய, பெண்களிடம்
மட்டுமே!

உறவுக்கு முகவரி
மறந்து ஊனமாய்
போன இதயங்கள்
சிலருக்கு மட்டுமே
அடிமையானதை
என்ன சொல்ல!

கோடி நொடி
 கூடிக்களித்தாலும்,
ஆட வைக்கக்
கூடி வரும் ஒரு நொடி,
அன்று உண்டு உனக்கு
பறை ஒலி!

யூகித்துப் பார்
மனிதா, யுகங்கள்
கடக்கின்றன உனை
வென்றபடி - உன்
மரணத்தை
அழைத்து வர!

அன்று - நீ
அற்பமாய் கழித்த
நிமிடங்களை
எண்ணி எண்ணிச் சிதறல்
கொள்ளும்- உன்
உயிரும்!

கலைகள் யாவும்
வரங்களே மனிதா,
உன்னுள் கமழும்
கலைகள் யாவும்
 வரங்களே!

மனிதா - நீ
கலை என்னும்
சாயம் பூசி கண்டதற்கும் அலைவதென்ன!

வென்றதென்ன
 மனிதா - நீ
வென்றதென்ன - உன்
வேஷங்கள்
வெளுத்திடும் நாள்
அன்று சொல்லும் - நீ
வென்றதென்னவென்று
காத்திருப்பில் நானும்
உன்னுடன்!

No comments:

Post a Comment