Thursday, November 29, 2018

ஒரு அரபுக்கண்ணீர்




இளநரை 
மறைத்தாய், 
இளமையை
 தொலைத்தாய்!

குடும்பம் 
எனும் பாரம் 
சுமந்தாய், 
தாயும் ஆனாய், 
தந்தையும் ஆனாய்!

கண்ணீரில் 
குளித்தாய், 
கனவுகளை 
தொலைத்தாய்!

பட்டினி கிடந்தாய், 
பசியை மறந்தாய், 
மறைத்தாய்!

கனவுகளை
 மூட்டை கட்டி 
துவைக்காமல் 
காத்து கிடந்தாய்!

நீ அல்லவா தாய்!

குளிரில் 
உறைந்தாய் 
வெயிலில்
 காய்ந்தாய் 
தேய்ந்தாய்!

தலைவலி 
கண்டாய்,  
தவித்தாய், 
தடுமாறினாய்,
 தலையனையை 
நினைத்தாய்!

வலி மறந்தாய்,
வாய் சொல்லில் 
காயம் ஆனாய்,
உடைந்தாய்
 நொறுங்கினாய்
போதும் தாயே - நீ 
இத்தனையும் 
செய்து எதை 
கண்டாய்!

Tuesday, November 27, 2018

துரோகத்தின் துரோகியர்.

சாக்கடை புழுக்களை
சாமியார் என்றும்,
சகதியில், விதி செய்யும்
விவசாயியை
தாழ்ந்தவர் என்றும்,
போக்கணம்
கெட்ட பேசுவோர்
பூமியில்
துரோகத்தின்
துரோகியர்!

வேர்க்கவும், உடல்
உக்கவும், வீதியில்
நின்று வெயில் குடித்து
தரை துடைக்கும்,
கூலியாளை,
குறை கூறி ஒதிக்கிடும் பாவியர், பயனற்ற
துரோகத்தின் துரோகியர்!

காகித தாழ்களில்,
நிறத் தரவுகள்
 இட்டதால் - அதை
அதிகமே பெற்றதால்,
கால் வயிற்று கஞ்சிக்கு,
நேர்மையில் நின்றிடும்
ஏழ்மையை மதித்திடா,
மமதைகள் யாவுமே - மதி
கெட்ட துரோகத்தின்
துரோகியர்!

ஆள்பவன் என்றும்,
அடைக்கலம் கேட்பவன்
என்றும், ஏளனம் செய்து,
தாழ்களை வீசி, தனக்குள்ளே அடக்கும்
யாவரும், துரோகத்தின்
துரோகியர்!

வெறுத்திடும் ஒன்றை,
மறுத்திடும் அதனுடன்,
இணைத்திடச் செய்யும்,
மாந்திரீகம், மந்திர வாத
துரோகத்தின்,
துரோகியர்!

பாசங்கள் கடந்து,
பணப் புதையலில்
புதைந்து, நேசங்கள்
தொலைத்து, காமத்தில்
குளிக்கும், யாவரும்.
மானிட வாழ்வியல்
துரோகத்தின்,
துரோகியர்!

நான், எனும்,
ஆங்காரத்தில்.
நாம் எனும், ஒற்றுமை
மறந்த கோவேறு
யாவுமே' மண்ணின்
மீது மா பெரும்
துரோகியர்!

நட்பிலே நுழைந்து,
கற்பிலே கறை பூச,
கற்பனை செய்தும்,
கட்சிதம் செய்தும்,
சமத்துவம் மறந்த யாவரும்,
பெண்மையின் துரோகத்தின்
துரோகியர்!

சொல்லலாம், இன்னும்
கோடி துரோகங்கள்.
சொல்லி மாறும் என்றால்.
மாறாது என்றறிந்தும்
மனம் பொறுக்காமல்
சொல்லிச் செல்கிறேன்
இத்தனை துரோகங்களை!

               

தமிழ் மறந்த தமிழர்கள்


சித்தனைக் கண்டேன்,
பித்தனைக் கண்டேன்,
தமிழ் புத்தகம் 
கொண்டே!

தமிழர் புத்தியில் 
நின்றும் செத்திடும்,
தமிழ் கண்டு அழுதேன்!



அம்மா, என்று 
உதடுகள் 
பிணைக்கையில்
அடி மனதில் பாசம்
கொண்டு ஆழும் 
தமிழ், இன்று மம்மி
என்று மகுடி ஊதுவது 
கண்டு, அழுதேன்!

வைரமுத்து வென்றெடுத்த
சிந்து தமிழ் எங்கே?

வாலியவர் கொஞ்சி 
நின்ற கொஞ்சு தமிழ்
எங்கே?

பாரதியின் 
பாட்டுத் தமிழ் எங்கே? 
இந்தப்
பாவியர் பூட்டி வைத்தார்
எங்கோ!



ஈழத்து தேங்காயும்,
சேலத்து மாங்காயும்,
ஏலத்திற்காய் காத்து
நிற்பதில்லை, 
தோழா.....
உங்கள் 
கோக்கனைட்,மங்கோ
போன்று......
என்றுமே நாங்கள் 
விற்றிடாத் தமிழ்,
வெற்றி முரசு, 
கொட்டிடும் தமிழ்!

வெள்ளையனை 
வீரம் கொண்டு
விரட்டிய தமிழா இன்று
உன் வெற்றிலைக்கு 
சுண்ணாம்பு ஆங்கிலமா?



சாதத்தில் 
சாம்பாறிட்டு
உண்ட நிலாச் சோறும்,
அதில் கண்ட 
அம்மாவின் அன்பும்,
டைனிங் டேபிளுக்கும்,
ஸ்பூனுக்கும், 
சிறையானதென்ன!

நான்' தமிழன் என்று
வீரம் கொண்டெழுந்த
வேங்கைகள் தந்த
வாரிசுகளே, 
ஆங்கிலேயர் 
அளவுக்கும், 
தமிழ் நுழைவதில்லையே
உங்கள் நாவுகளில்!



ஆந்தைக்கு ஒப்பான 
சாமான்யவான்களே'
ஆடிப் பெருக்கு வரும்
அலையில் கழுவுங்கள்,
உங்கள் நாவுகளை,
ஆங்கிலத்தின் 
துர் நாற்றம் 
அங்கலாய்க்கிறது 
உங்கள் நாவுகளில்!



எண் திசைகளும்
தமிழ் எனும் 
சுவை வேண்டும், 
எடுத்தியம்புங்கள் 
என் தாய் மொழியை
பாமரனும் பாடி மகிழ!

தமிழ் கொண்ட 
தாழாத வாசம்
தலை மகுடம் 
சூடுமா இனியாவது, 
விடுகை பெறுமா 
இதயங்கள் தமிழுக்காய்!

Monday, November 26, 2018

அவதி

காத்திருப்பில்
காதல் துலைகிறதா
என்று கேட்டன்!

கருவுறுகிறது
என்றது மனது
நிமிடங்களை
என்னால்
நிந்திக்கக் கூட
முடிவதில்லை!

காரணம்
அந்த நிமிடம் உனதாகி
 விடுமே என்று
சிந்திக்கிறேன்!

கானலில் காதல் செய்தேன்

கானலின் சாரலில்
சரிந்தவள் நான்,
காதலைத் - தீ
என என்னி
நீரினில் புதைந்தவள்
நான்!

ஏதென அறியாமல்
எதனிலும் ஒட்டாமல்
திரவமாய் மிதந்தவள்
நான் - இன்று
உன் குரல் கேளாமல்
உன் முகம் பாராமல்
உயிர் வாழ்வது
சிரமம் என
துடிப்பவள் நான்!

எங்கிருந்தாய்
இத்தனை நாட்கள்
ஏன் மறைந்தாய்
என் விழி நின்றும்!

பித்தனையே
மிஞ்சி விட்டேன்,
உன்னை மொத்தமாய்
வடிப்பதற்கு - நீ
கார்காலக் குளிர்
மேகம், அதனால் தான்
நான் உன்னில் மலர்கிறேன்!

Sunday, November 25, 2018

காதல்

என்  காதலே
நீ கொடுத்த சில 
கோடி 
முத்தங்களை 
பதுக்கி வைக்க
இதழ்களில்
கூட இடமின்றி
போகிறது!

உயிரக் காதலே
உறைந்திடும் 
உன் நினைவுகள்
கூட, இதயம் தாண்டி
என் இட வலம் 
எங்கும் தவழ்கிறது!

உன்னோடு உறவாடும்
தருணங்களில்,
என் ஆறறிவிலும்
புன்னகைக் 
கொத்துக்கள்
விரிகிறது!

புத்தகத்திலும்,
பூக்களிலும்,
அதனை வண்ணம்,
அவ்வளவும் - உன்
நிழல்களே!

எத்தனை 
காலங்கள் வாழ்ந்தாலும்,
என்னோடு வாழ்ந்திடு!

என் பெண்மையும் 
கொஞ்சம் உன்னோடு 
மலரட்டும்!

குருதித் துவள்

நித்தம் நித்தம்
வெடிக்குதடா
வெடி குண்டு, 
அந்த பாவியரை 
நாம்
அழிக்க வேண்டும்,
அணி திரண்டு!

ரத்தத்தில் 
சிதையுதடா
அரும் மொட்டு, 
அதைக்கண்டு 
பித்தமாய்க்
கலங்குதடா 
தமிழ் வட்டம்!

இத்தனைக்கும் 
என்ன செய்தோம் 
எம் மக்கள், 
ஏகனே ஏங்குகிறோம் 
கெதியற்று!

குதித்துச் சிதறும்
 ரத்தத்தை வேடிக்கை
பார்க்கும் ஐ நா வே,
ஒரு
நாள் உம்மீது
 வெடிக்காதா
 வெடி குண்டு, 
விழித்திடும் விடியல் 
எமக்குமாய்!

கோப்பியிலும், 
பேரித்தங் கனியிலும்,
ஊறிய படி வேடிக்கை
 பார்க்கும் அரபு தேசமே"
ஏகனும் உம்மை
வேடிக்கை பார்க்கும் 
நாள் உண்டு மறவாது, 
மண்ணறைக்கு 
அஞ்சியேனும் குரல்
 கொடுங்கள்!

மடிந்தொழியும் 
மழலையரே, 
ஏங்குகிறோம். 
உம்மை
ஏந்தும் பாக்கியம் 
இழந்தவர்களாய், 
உமக்காய் கை 
ஏந்துகிறோம் நாயனிடம்!

ஏய்........
எகூகுதிகளே!

வேண்டுதலை 
வென்றிடாது 
உங்கள் பீரங்கிக் 
கணைகள்,
ரத்தத்தில் நீராடும் 
ராட்சசர்களே, 
பித்தம் கலங்கி
 பிடரியில் பின்னங்கால் 
அடிக்க ஓடும் நாள் உண்டு, 
எத்தி வைத்துள்ளான் 
வல்ல நாயகன் மறவாதீர்!

இப்படித்தான் 
குதித்தனர் 
இஸ்ரவேலர்,
எப்படி வந்தது 
தீச்சுவாலை??
மறந்துட்டீரா?
உம் மறதிக்கும் 
மறதி தரும் நாள் 
உண்டு மறவாதீர்!

இரங்கல் கொண்டு 
இதயம் பதற
 உதவ வழியின்றி
 துடிக்கின்றோம், 
தவிக்கின்றோம், 
காரணம் நாங்களும்
 சட்டம் என்னும்,
சிலந்தியில்
சிறையுண்டு வாழ்கிறோம்,
சிரிய 
நெஞ்சங்களே எம்மை
மன்னியுங்கள்!
  
ஏகனே கதி என்று கதறியழைக்கின்றோம்,
உறவுகளே,உதவி வரும்
அஞ்சாதீர். தக்பீர் முழக்கம் தழைத்தோங்கும்,
அஞ்சாதீர்!

வரலாற்றைப் புரட்டிப் பாரும், மடயர்களே.
இழப்பு மட்டுமே எமக்கு
தோல்விகள் அல்ல.
சென்றவர்கள்
வென்று விடுவர்
சொர்க்கமதை
ஒன்றுக்குமாகா
உலகின் மேல்
 ஏன் உனக்காசை!

எம்மக்களை
 மண்ணறைக்கே 
உன்னால் அனுப்ப முடியும்,
 மண்டியிட வைக்க முடியாது,
வென்ற குலம்
இது இன்னும் வெல்லக்
 காத்திருக்கும் குலம்!

ஐ நா வுக்குள்
 அடங்கிக் கிடக்கும்
அறிவு முடங்கிப் பேடையரே,
வெளியேறுங்கள்
எங்கள் சேலைகளை
 அணிவிக்கிறோம் உமக்கு!

அறிந்து கொள்ளுங்கள்,
அனியாயக்காரர்களே 
இது எமக்கான
 சோதனையே தவிர
உமக்கான சாதனையல்ல.
கண்டு கொள்வாய்,
நின்று கேள் மனிதா 
வென்று விடும் மனிதம்
உன்னை!

அழுதிடுமே மழையது

நீந்தாத நீர்க்குளமும்
ஏர் ஏந்தாத ஏரியதும்
எங்கும் காணவில்லை....

பார் செய்தாரோ
பாலை வனம்,
நீர் தீர்த்தாரோ மானுடமும்,

நான் குளித்த ஏரிக்கும்
நா வரழ்கிறது
நீர் அருந்த......

இடி தொலைத்து
முகில் தொலைத்து
மழை மருத்து
வெயில் கொளுத்த ......
வெட்டி விட்ட மரமதும்
பட்டொளியுது பார்.....

மழை விட்ட சொட்டோ ?
மழை கண்ணீர் விட்ட சொட்டோ...?
குழாய்க்குள் குறு குறுக்க
உதடு நனைத்தேனும்
உயிர் வாழ வந்ததிந்த
வயலான்......

இன்று இது போதும்,
நாளையும் அந்த மழை கொஞ்சம் அழுதிடுமா .......?
நாவரண்டு நான் வரும்போது
என் உதடேனும் கொஞ்சம்
நனைத்துச்செல்ல.......

தோல்வி

என்னைத் தூற்றிக்
கொண்டு நீ ......
தூசியில்
புதைகிறாய்!

நாளுக்கொன்றும்
நிமிடத்துக்கொன்றுமாய்
உன் தேடல்கள் மாறலாம்,
தேவைகள் தீரலாம்!

எல்லையின் முடிவில்
எங்கும் தேடிப்பார்
இல்லை என்ற
விடையே உன்னை ஏமாற்றும்!

ஔித்ததும், மறைத்ததும்,
மறுத்ததும், மர்மமாய்ப் போகும்.
மறந்தவை நினைவு கூரும்.
மறுகணம் அவைகளும்,
உனக்கில்லை என்றாகும்.

அன்று தோற்பது நேசமல்ல நீயாவாய்.


காத்திருப்பில்

ஒற்றை மரம்
உதிரும் இலை
கால் நனைக்க நீர்
கையணைக்க நீ...!!!

வெற்றுக்காடு
விட்டில் சத்தம்
சிணுங்கா நினைவு - நீ
சிணுங்கும் நிகழ்வு...!!!

கொட்டும் அருவி - மீன்
கொத்தும் குருவி
மெல்லிய தென்றல் - கவி
சொல்லிடும் "அன்றில்"...

அங்கு

நான் தனிமை படகு - நீ
தவழும் துடுப்பு...!!!😱

அடிமையாய்



இந்த வானில்
எந்த சுதந்திரமும்
இல்லை!
எண்திசைக்குள்தான்
முடங்கிக் கிடக்கிறது
மேகங்கள்!
கடந்து போகவும்,
திக்கெட்டும் தாண்டி
திசை ஒன்று இல்லை!

Saturday, November 24, 2018

ஏமாற்றம்

உறக்கம் கூட
இரக்கமின்றி
கொல்கிறது😢

மனதின்
ரணங்கள்
மீதமின்றி
தேகம் எங்கும்😡

சுமைகளுக்குள்
முகம் புதைத்து
விடியலைத்
தேடுகிறேன்😦

விடிவு ஏனோ
எனை எட்டாத
தூரத்தில் நின்று
வேடிக்கை
பார்க்கிறது😭

மழை



சிலிர்த்த
உரோமங்களை,
விறைத்த 
விரல்களால், 
அணைத்துக் 
கேட்கிறேன்,
வானம் அழுகிறதா
என்று!
அவைகள்,
மழை நீரைக் 
கொப்பளித்து
குளித்ததாய்ச்
செல்லி உறங்குகிறது 
என் கைகளில்! 
ஓ......மேகமே!
நீ - அழுதால்
தான் இயற்கை
உயிர் வாழும்!

காத்திருப்பு

பொன் அரன்
மீதிலே,
பொற் கொடியும்,
மன்னவன்
காதலால்,
மயங்கி கிடக்க!

கன்னியின்
கனவுகள்,
மஞ்சணை
முழுவதும்
 மிச்சங்கள்
ஏதுமின்றி
தேங்கிக் கிடக்க!

அச்சமே,
 அழகொளியை
அகன்று மிரழ,
ஒளி நடுவே விழி
ஒளிர்ந்து, காத்திருந்தது
மன்னவன் வருகைக்காய்!



Friday, November 23, 2018

யூகித்துப்பார் மனிதா


வலைத்தளங்களில்
வாழ்வு கொள்ளும்
மானிடனே.....
சிலைக்கற்களாய்
போனதென்ன
மனிதம்!

இசைத் திடல்களாய்
ஒலி எழுப்பும்
இதயங்களே....
ஈன இன்பத்தில்
ஊனம் கொண்டதென்ன
உம் இதயம்!

பெருங் கடல்களாய்த்
திரழும், உறவுச்
சிற்பங்களே'
வலையமைப்பினுள்
பூட்டி வைத்ததென்ன
நம் உறவை!


கருணைக்கு
காதல் என்று
பெயர் சூட்டும்
எஜமான்களே,
காமத்தை காதலின்
அத்திவாரமாக்கிக்
கொண்டதென்ன லீலை!

கம்பன் ஒரு கவி
சொன்னான், காதலைப்
போற்றி இன்று
 வம்பர்கள் ஒரு
வகை சொன்னர்
காதலை மாய்த்து!


கறுப்பழகன்,வைரமுத்து காதலித்துப்பார்,
என்றான் கருணை வர,
காதலிக்கின்றோம்,
உறவுகளை அல்ல,
வலையங்களை!

சத்தியத்தில் எச்சில்,
பூசி நுணி நாக்கில்
வைத்துக்கொண்டு,
சாகசம் செய்வார்
பேடைய, பெண்களிடம்
மட்டுமே!

உறவுக்கு முகவரி
மறந்து ஊனமாய்
போன இதயங்கள்
சிலருக்கு மட்டுமே
அடிமையானதை
என்ன சொல்ல!

கோடி நொடி
 கூடிக்களித்தாலும்,
ஆட வைக்கக்
கூடி வரும் ஒரு நொடி,
அன்று உண்டு உனக்கு
பறை ஒலி!

யூகித்துப் பார்
மனிதா, யுகங்கள்
கடக்கின்றன உனை
வென்றபடி - உன்
மரணத்தை
அழைத்து வர!

அன்று - நீ
அற்பமாய் கழித்த
நிமிடங்களை
எண்ணி எண்ணிச் சிதறல்
கொள்ளும்- உன்
உயிரும்!

கலைகள் யாவும்
வரங்களே மனிதா,
உன்னுள் கமழும்
கலைகள் யாவும்
 வரங்களே!

மனிதா - நீ
கலை என்னும்
சாயம் பூசி கண்டதற்கும் அலைவதென்ன!

வென்றதென்ன
 மனிதா - நீ
வென்றதென்ன - உன்
வேஷங்கள்
வெளுத்திடும் நாள்
அன்று சொல்லும் - நீ
வென்றதென்னவென்று
காத்திருப்பில் நானும்
உன்னுடன்!

Thursday, November 22, 2018

காதலாசை

வஞ்சியின்
 இதழ்களை
வஞ்சனை
இன்று தழுவ,
செல்லியின்
 காதலுக்கே
செருக்கு வரும்!

மெல்லிய யாழதை
 மெல்லிடையால் தழுவ,
மெல்லிசையும்
பூப்படையும்!

சொல்லிய
கனவுகள்
புருவத்தில் குடி
புகுந்தே கோட்டை
கட்டும்!

கன்னியின்
கரம்பிடிக்க
மட்டும் களவு வரும்!

குரல் வழிக் கவிதை


மழை


சிலிர்த்த
உரோமங்களை,
விறைத்த
விரல்களால்,
அணைத்துக்
கேட்கிறேன்,
வானம் அழுகிறதா
என்று!

அவைகள்,
மழை நீரைக்
கொப்பளித்து
குளித்ததாய்ச்
செல்லி உறங்குகிறது
என் கைகளில்!

ஓ......

மேகமே!
நீ - அழுதால்
தான் இயற்கை
உயிர் வாழும்!

இளவேனில்




மழை மேகம்
சிலையாகி
நிற்கும் வரை
குளிர் காற்று
எனை மூடுது
மனதோடு உறவாடுது

மழைத் தூறல்
மண்ணைத் தளுவ
அது ஏனோ
உடை மாற்றுது,
நடை போடுது

ஜன்னல்
ஓரக்கன்னிப்
பூவின் விழிகளில்,
மின்னல் வந்து
விளையாடுது
மிரண்டும் மனம்
பகல் காணுது

இன்னும்
ஏனோ காற்று
அது உடை மாற்றுது,
தென்றலாக உருவானது

கன்னியவள்
விரல் இடுக்கில் 
வெள்ளித் தூறல்
கதை பேசுகையில்'
தென்றலுக்கு 
குளிர் எடுத்ததால்
குறுகி அடங்கி வான் 
மழைக்கு வழி விட்டதோ!

இன்னும் இவள் கண்ணில் விளையாடும் 
மின்னலுக்கு 
என்ன மயக்கம்" 
நின்று கதை பேசுது!
கொஞ்சி உறவாடுது!

கன்னியோடு 
மயக்கம் கொண்ட 
மழைக்கு ஏனோ 
பூமி மீது மோகம்
தனக்குள்ளோ 
மூழ்கடிக்குது!
தனிமையில் தத்தளிக்குது

ஓஹ்.......
அவள் விழிகளில் 
விழுந்ததால்
மயங்கியதோ?
மசங்கியதோ?

மழையது!
       
         ஸ்னேகமுடன்
                       ஷியா.

ஏக்கம்...

உறக்கம் கூட
இரக்கமின்றி
கொல்கிறது😢

மனதின்
ரணங்கள்
மீதமின்றி
தேகம் எங்கும்😡

சுமைகளுக்குள்
முகம் புதைத்து
விடியலைத்
தேடுகிறேன்😦

விடிவு ஏனோ
எனை எட்டாத
தூரத்தில் நின்று
வேடிக்கை
பார்க்கிறது😭

நேசமற்ற வாழ்வு...

உயிர் இருந்தும்
ஜடத்தைப்போல்
நேசிக்கப்படாத
வாழ்வு!

அத்துனை படைப்புகளும்
மண்ணில் உலவ,
யாரும் அற்று
நிர்க்கதியாய்,
அலையும்
வலி,நேசிக்கப்படாத
வாழ்வு!

இப்படி ஓர் வாழ்வு
சுவாசிக்கப்படாமலே
இருந்திருக்கலாம்!