Sunday, December 30, 2018

நவீன நங்கையே

காமம் என்னும்
திரையை காதல்
கிழிக்க ....
கருவறை தேடி உயிர்
அணு போக !

சில நிமிட சிற்றின்பம்
சிசு அதைத் தோற்ற
கசடுகள் மாற்றவென்று
கருக்கலைப்பு, உயிர்
பறிப்பும் கயவர் அரங்கேற்ற!

கோடியில்  ஒருத்தி
குலத்தில் ஒருத்தி
மலடாய்த் துடிக்க
கல் நெஞ்சர் கொல்கின்ற
செயலில் வெல்கின்றதென்னவோ!

ஒருக்காலும் மகப்பேறு
இல்லை என்று
ஊரொங்கும் தூற்ற
ஒழுங்கை வழி ஒழிந்து
 ஒதிங்கிச் செல்லும்
சில மனம்.....!

கால்க் கட்டு இல்லாமல்
கவனிப்பார் இல்லாமல்
தெருவோர சந்துகளில்
காம சீழ்களை வழியவிட்டு
கற்பையும் தாரை வார்த்து
கருவையும் உருவாக்கி
நாய்களின் பசிக்கு
சிசுக்களைப் படையல்
வைக்கும் சில மனம்!

காதலாம்.....
இணயத்தில் முகவரி
தொடுத்து
இதயத்தில் ரசனைகள்
வடித்து, குருந்தகவலில்
வாழ்வை வகுத்து,
அழைப்புகளில்
அங்கம் காட்டி, தவிப்புகளை
அதிகம் ஏற்றி குலம் மறந்து
குடும்பம் மறந்து,
பாசம் மறந்து, கடைசியில்
தன்னை மறந்து
கற்பை இழந்து
உயிரையும் கொல்லும்
இதற்கு பெயர் காதலாம்!

காதலில் சுயம் மறந்து
பெற்றவள் உயிர் பறித்து
உறவினை உலையிட்டு
ஊரானை உயர்தி
உரம் ஏற்றி உன்னையே
நீ அழிப்பதுதான்
காதலா!

நாகரீக நங்கையே
உன் ஆடையில்
ஆங்காங்கே அங்கம்
தெரிவது போல்
உன் செயலிலே
அவப்போது சுய நலம்
தெரிவது போல்
சிசுவையும் நினைத்து
விட்டாயா!?



பாசத்தால் விழைந்த
நீ....
 மோகத்தில் மூழ்கி
காமத்தில்
 கொலையாளியாகிறாயே
கொடூர மனம்
கொண்ட பெண்ணே
நீதியாளன் பாராமல்
இல்லை நிறுத்து உன்
செயலை!

உருவெடுக்கிறோம்
என்று கூடத் தெரியாமல்
உலகையும் அறியாமல்
வலியை மட்டும் கொடுக்கிறாயே
இதற்கு நீ மகவற்ற
மலடியாய் உருவெடுத்திருக்கலாம்!

பிளைத் தாகத்தில்
பிரழயம் செய்யும் மனங்களை
ஒருகனம் சிந்தனை
செய் இனியேனும்
வருந்தி நடவாதிடினும்
திருந்தி நட நவீன நங்கையே!

No comments:

Post a Comment