Thursday, December 20, 2018
சீற்றம் காட்டவா கிழைகளைச் சுருட்டவா
மூன்றாம் உலகத்தில்
இருந்து முளைக்கிறது
என் உறவுகளுக்கான
உயிர்!
அவள்....
முன்னே கிடக்கையில்
சானையின் ஈரம்
காயும் முன்பே சனியனே என்று எடுத்தெறிந்தவள்
என் தாய்!
வேண்டாப் பிள்ளை
என்றால் வெறி நாய்கள்
கூட ஈன்றொடுக்காது போல!
கற்பனைக்கும் எட்டாத
கருவறையில்
விற்பனைக்கு என்று
விழைந்தவள் நான்,
தொப்புளிலே தொங்க வைத்தவளுக்கு தோழ்கழிலே தங்க வைக்க இரக்கமில்லை!
கற்பனியாய் நீ இருந்து
கடு கடுத்ததை கற்பத்திலே கேட்டிருந்தேன் கலைந்திடத்தான் தெரியவில்லை ......
தெரிந்திருந்தால் கருவோடு கலைந்திருப்பேன்
தெருவோடு கிடவாது!
உன் சேலையில பட்ட
கரை செடி என்று கழுவி
விட்டது போல்
உன் மடியிலே விழைந்த
என்ன மண்ணோடு புதைச்சிருந்தா
உரமாகிப் போயிருப்பன்
மரமாச்சும் செழிச்சிருக்கும்!
அணல் வீசும் மூச்சோட
தணல் வார்த்தை சூல் ஆட தனியாத்தான்
தள்ளி விட்ட ......
விறகுக்கட்ட விலை பேசி விற்பது போல்
என நீயும் வித்துப்புட்ட!
புரிதல் கொண்ட வயதினிலே தெரிந்து கொண்ட முதல் வார்த்தை தத்துப் பிள்ளை.......
விரிசல் தந்த ஊரு சனம் பெரிசா ஒன்று
சொல்லயில்ல......!
கருசலுல போட்ட விதை
காலத்துக்கும் விருட்சம்
தராதாமே......
உன் கருவறையில் இருண்ட என் உலகம்
கடைசி வர வரண்டதென்ன!
உருண்டு பிரண்டு
எழுந்து நிற்க உலகம்
கொஞ்சம் எனக்காய்ச் சிரிக்க நான் இழந்த கண்ணீர் இமையத்தை புதைக்குமடி!
திசைகளைத் தேடி
விசைகளைப் பூட்டுகின்றேன்
முகவரி எனக்கெழுத
முழுமையாய்
இழந்து நின்றேன்
இழமையின் சுகங்களை!
எனக்கு மட்டும் ரணங்களால் இதயம்
அதை புன்னகையால்
மூடுகின்றைன்!
அழுகை
என்னும் வாசகத்தை அமர்விடமாய் கொண்ட
நான் அரபு தேச வீதியிலே முகவரியைத்
தேடுகையில்......
சிரிப்புக்கு சிறகு முழைத்தது!
என் உறவுகளுக்கோ
மூன்றாம் உலகில் இருந்து உயிர் கிடைத்தது!
அழைப்பு மணிகள்
ஆயிரம், ஆயிரம்,
நிழல் கூடக்
கண்டதில்லை
அக்காளாம், அம்மையின் உடன் பிறப்பாம்.....
அப்பனுக்கு ஆயிரம் அண்ணன்களாம்
அப்பப்பா........!
சாணையில பட்ட ஈரம்
சருகாகிப் போவதற்குள்
வீதியில விட்டெறிஞ்ச
தாய் வளிப் பாசம் எல்லாம்
விருட்சமாய் நான் எழவே வெட்கமின்றி
நிழலுக்கு ஒதுங்குதப்பா!
குருத்துலையே
கருத்து இல்ல....
குடி வளிக்கும் தேவையில்ல.....
விருட்சமாய் வந்த பின்பு
நிழல் எதற்கு!
நான் என்ன சொய்ய....???
என் கிழைகளை சுருட்டிக் கொள்ளவா
இல்லை காற்றோடு சுழன்று சீற்றம் காட்டவா!
என் மதிக்கு நின்மதியில் பங்கு இல்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment