Sunday, December 9, 2018

ஒரு விதவையின் ஏக்கம்



இணக்கம்தான்
இதயம் முழுவதும்
கொஞ்சம் பயத்தோடு!

உன்னை அள்ளிக்
கொள்ள ஆசைதான்
ஆனால் என் மடியிலோ
வேறு கனம் இருக்கிறது!

தயக்கமே இப்போது
தள்ளி நில் என்கிறது!

நான் அணிந்து
கொண்ட
அரிதாரமே
என்னை விலகி
நில் என்கிறது!

மாலை கட்ட
வாழையில்
தோலுரி,
காயங்களில்
தீப்பற்ற  வைத்து
விடாதே!


வாடிய பூக்களுக்கு
ஜனனம் கொடுக்க
நினைக்காதே
அவை அப்படியே
இருக்கட்டும்
விட்டு விடு!

தேவைதான் - ஆனால்
தேவையற்ற
வார்தைகள் சூழ்ந்து
சுட்டு விடுமோ என்ற
அச்சமே ஆக்கிரமிப்பின்
உச்சியில்!

வாடிய மலர்களை
அப்படியே விட்டு விடு
அவை அப்படியே
இருக்கட்டும்.
மாறாக தீயில் வீசாதே!

ஜடங்களைக் கண்டு
பரிதாபம் கொள்ளாதே,
அது தேவையில்லை.
முடிந்தால் நிழல் கொடு
முட்டி உரசி பிச்சு எறியாதே!

No comments:

Post a Comment