Tuesday, December 4, 2018
விதி செய்தவன் யாரோ
சாய்தலில்,
சோர்வு இல்லை!
சாமர,
அழகோ கொள்ளை!
பார்வையில்,
அழகைத் தின்னு!
கண்கள்,
மேய்தலில் அதனை
உறுஞ்சு!
காதலில்,
போர் தொடுத்தே,
காமத் திரை கிழித்து
கற்பழிக்கும், சூரியனை,
அடக்கு!
புஷ்பங்கள், புழுதியில்
குளியாது திரையிட
முயற்சித்துப் பார்!
உனக்குள் மட்டும்,
சுவாசிக்க வைக்க
வழி தேடு!
அருவிக்கோ அடி
நனைக்கும்
அனுமதியை,
ரத்துச் செய்!
பனித்துளி பாய்
விரிக்காது பார்துக்
கொள்ள உன்னால்
முடியுமா!
ஏலச் சந்தையில்,
பேரம் போகாது
பூக்களுக்கு
பெறுமதி சேர்க்க - நீ
தயாரா!
பூக்களுக்கு,
இத்தனை
வினாக்கள்
என்றால்,
பூ மகளுக்கு,
மட்டும் ஏன்
சதா......
வாழ்க்கைப்
போராட்டம்!
கருவில் உதிர்த்த,
காலம் தொட்டு.
புழுதியில் புதையும்
காலம் வரை
கனவுகள் தொலைத்தோம்!
நாருடன் மணத்திடும்
பூவுக்கும், பாருடன்
கமழ்ந்திடும், பெண்ணுக்கும்,
காற்றுடன் கதை
பேசியே.....
புழுதியில் புதைய
விதி செய்தவன்
யாரோ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment