Wednesday, December 19, 2018
காத்துக் கெடக்கன் புள்ள
பச்சை மரச் சோலைக்குள்ளே
மெத்தைப் புளுக் கூட்டம்
போல் நெஞ்சரிக்க
நினைவு தந்து போறவளே.....!
கஞ்சுப்பானை நீ
சுமந்து போக....
ஆத்தருகே அறுகறுக்க
நான் கெடக்க
காத்து வந்து கூத்தாடி
அறுகைச் சாய்க்க
முத்தழகி உண்னோட
வண்ணம் கண்டு
அருவாவோ கை அறுக்க!
செந்தாமரை முகத்தோட
குருத்து மணல்
குவியல் போல குந்தி இருக்கும் முகப்பருக்குள்
நோகாம நான் தடவ
நேராதோ நேரமது!
பட்டணத்தில் படிச்ச புள்ள பகட்டேதும்
உணக்கு இல்லை
பாமரந்தான் நான் புள்ள
பாராமல் போவியோ!
ஏட்டுல எழுதாமல்
இலக்கணம் வகுக்காமல் வாழ்க்கைக்கு வேண்டியத நாத்து நடும்
பெண்கள் சொல்ல
வாய்க்கா வளி வந்து ஏறிக்கிச்சு புத்தியில!
அய்த்த மக படிச்ச புள்ள
ஆனாலும் மாமனுக்கும்
மனக்கணக்கு கொள்ளை!
கஞ்சுப்பானை ஆறும் முன்னே கருவிழிய
நோக்கு புள்ள
கருவாயன் நான் காத்து
கிடக்கனுல்ல......
நெஞ்ச நெகிழ வச்ச
பஞ்சு விரல் பிடிக்க
பரிசம் போட நான்
வரட்டா!
அந்தி சாயும் முன்னே
அவசரமா போறவளே
பிஞ்சு மனசு ஒண்ணு
கெஞ்சிக் கெடக்குதம்மா
காஞ்ச சருகப் போல
கணக்கெடுக்காமல்
போறதென்ன!
நெட்டை விரல்கள்
தொட்ட களி மண்ணும்
நேசம் புரியுதடி ஒம்மேல
கருவாயன் காதலுக்கு
வருவாயோ தேரிழுக்க
ஆத்தருகே பூத்த அறுகுக்ள்ள கொட்டி விட்டு போறம்புள்ள
ஓ.... நெனப்ப.....
காத்து வந்து ஓங் காதில் சொன்னா
நேத்திருந்த இடத்துல காத்திருப்பன்
வா புள்ள கை புடிக்க!
Subscribe to:
Post Comments (Atom)
பல பக்கமும் கலக்குரிங்க...
ReplyDeleteநன்றி நட்பே
ReplyDelete