Sunday, January 6, 2019
இறந்த இதயம்
ஓராயிரம் கனவுகளுடன்
உலவுகின்றன
தென்றலைப் போல்
உலவி வந்தள்!
பாரம் அறியா வயதினிலே
வாழ்க்கைச் சக்கரத்தின்
இரண்டாம் பாகம்
எனும் புது உறவை
தலையில் சூடிக் கொண்டவள்!
துணை என்னும் வேலிக்குள்
துரு துருத்துச் சுற்றியவள்
கருணைக் கடலின்
ஆழமாய் நின்றவள்!
மனிதனை அன்றி
பட்சிகளுக்கும்
பசித்திடக் கூடாதென்று
ஓர சாரமெல்லாம்
தீனி போடும் பெண்ணவள்!
அழகுக்கு வெட்கம்
வரும் அவள் அழகு கண்டு
அத்தனையும்,அவள் செயலும்
அழகெனக் கொண்டவள்!
இவள் இன்பம் கண்டு
இயற்கை எரிச்சல் கொண்டதோ
என்னவோ சுழற்றிய
சூறாவளியை நிறைத்து
வைத்தது இவள் வாழ்க்கை
தோப்புக்குள்!
சுழற்றிய திசை எல்லாம்
பிய்த்து வீச பஞ்சமும், வெஞ்சமும்
நெஞ்சே நிறைய
வஞ்சியின் வாழ்வோ
பிஞ்சன பஞ்சுகள் போல்!
தஞ்சம் புகுவிடமெல்லாம்
வெஞ்சமே மீதமாக
வஞ்சி அவளோ வையக
வீதியில் வடுக்களை
வாங்கியே கனத்திட்ட
ஜடமாக இதயம்
துடிக்க அவளோ இறந்து
கிடக்கின்றாள்!
உலகமே அவளை மறந்து
சிரிக்கிறது!
இதயம் இறந்தும் துடிக்கிறது!
✍
ஷியா.
...........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment