அவன் தந்து போன
நினைவுகளில்
நொந்து போன
இதயம் தான்
என் இதயம்!
அவன் வென்று போனது
என்னைத்தான் என்
அன்பையல்ல....
உயிர்
கொன்று போனவன்
கொண்டு போன
புன்னகைகள் பூக்க
மறுத்தனவே...
ஏக்கம் திணித்தனவே!
ஏளனப் பொழுதுகள் குவிய
என்னென்றும் கேளாது
ஓடும் நிமிடங்கள் கூட
என்னைத் தடவிப்
போனனவே...!
ஆற்றருகே அமர்ந்திருந்து
ஊட்டி விட்ட நினைவுகள்
எல்லாம் ஊசலாடுகின்றனவே!
கோர்த்து வைத்த கனவுகளை
சேற்றில் புதைத்திருந்தாலும்
கோரையாகவேனும்
படர்ந்திருக்கும்...
தீயில் இட்டு திணறவைத்தவன்
நீயே - தீ!
வார்த்தைகளில் வாழ்வளித்த
உன் உதடுகள் அதே
வார்தை கொண்டு வதம்
செய்தனவே - எனை
ரணம் செய்தனவே!
எதுவாயினும்,என்னை
விட்டுப் பிரியாதே
என்று நீ கூறிய
வாசகம் இன்னும்
அறைகூவலாகவே
ஒலிக்கிறது விதியிடம்
நான் தோற்ற பின்னும்!
எனை பிரிவதற்கு
உன் நட்பை
ஆயுதமாக்கினாய்
அவைகளுக்கும் இரக்கம்
செத்துப் போனனவே
இதழாகளாலே அவைகளும்
ஈட்டி எய்தனவே!
உன் உறவுகள்
உன் மீதான அக்றையை
என்மீது விசமாய்த் தொழித்தன
விழுந்து எழுந்தவள்
என்பதால் விழும்போது
வலிக்கவில்லை....!
உன்மேலான
நினைவாற்றல்
ஒன்றுக்கு ஒன்று
இலவசம் என்று
எண்ணியதோ தெரியவில்லை
என் இதயம்!
எனை நங்கூரமிட்டு
கட்டிவைத்தது எங்கும்
அசையாது.....
நான் மீண்டிராத போதும்
மீண்டும் எழுந்தேன்!
காலம் உன் நினைவுகளை
என்னில் மாற்றியது
சில வருடங்கள் கடந்தனதான்
இருப்பினும் காற்று வந்து
போவதுபோல் உன்
நினைவுகள் வராது இருப்பதில்லை!
ஆனால் எதுவும் எனை
பாதிக்கவில்லை
மீண்டும் உன் கண்களைக்
காணும் வரை.....!
கண்ட போதும்
நான் விழவில்லை
ஆனால் ஏனோ வலிக்கிறது!
எழத் தெரியாதவளாய்
சிதைந்து கிடந்தேன்
அந்த சில நிமிடங்கள்
ஏனோ உன் நண்பனின்
நட்பையும் துண்டிக்க
மனம் மண்டியிட்டது
அதுவும் எனை வென்று
விட்டது!
இல்லறம் இணைந்தாய்
என்று காதுகள்
கீறல் கொண்டது
என்னிடத்தில் அவளைக்
கண்ட போது இதயம் தான்
கொஞ்சம் வலித்தது!
நினைவுக்கு வந்தது
உன் வார்த்தைகள் என்பதால்!
நீ ..... நீயாக இருக்கிறாய்
நான் எதுவாக என்று
அறியாத போதும்!
ஷியா.
No comments:
Post a Comment