பொழுதுகள்
மந்தம் கொண்டது
மழை மேகத்தின்
வருகையால்!
உன் இதழ்களோ
தேனைப் பொழிந்தது
நீ வெட்கம் கொண்டு
சிவந்ததால்!
கவிஞனை அழைத்து
கவி புனையும்
வெட்கச் சோலையே
எனை உன் வெட்கங்கள்
களவாடியதை
அறிவாயோ!
அடடா.....
இதழ் விரித்த
வெட்கத்தால்
உன் கன்னங்களோ
குழலுக்குள் ஒளிந்து
கொள்ள இடம்
தேடுதே....
இவன் விழி காயுதே!
No comments:
Post a Comment