ரத்தத்தின் ரத்தங்கள்
உயிர் சப்தத்தின்
கூச்சல்கள் உயர்ந்தே
ஒலிக்கட்டும்..... ஒலிக்கட்டும்......
தீ என்ன, நீர் என்ன
தீராத தாகங்கள்
வீர் கொண்ட
வேகத்தில் பாயாதோ
ஆவல்கள்......
ஆட்சியில் பூச்சியங்கள்
ஆழ்கையில்
ஆழி எழுந்தது தவறா
ஆணை எழுப்பிடு தோழா.....
யாழில் அறுந்திடும்
நூலை எடுத்தொரு
காவியம் படைத்திடு தோழா.....
யானைப் பலம்
கொண்டு யாதும்
நமக்கென்று வீறு நடை
பயின்றிடு தோழா.....
(சேர சோழன் அழிந்ததால்
வீரம் குன்றிடல் முறையா
வீன் பேதம் வகுத்திடல்
ஆழகா.......)
தேக விசை எழ தீயில்
துயில் கழைந்திடு
தோழா......
சாது மிரண்டிட
சாவும் ஒழிந்திட
சடையில் அடி
தோழா......
சாதி விரண்டிட
சப்தம் அடங்கிட
ஏறி வதம்
செய்திடு எம் தவைவா....
பூமி அதிர்ந்திட
பூவும் கசங்கிட
உறங்குதல் முறையா
சொல் வீரா....
(புத்தரின் சிலையில்
பொத்தல்கள் விழுந்தால்
சோனகன் மேல்
பழியா ......)
எங்கள் முஹம்மதின்
நல் வழிகளை - நீ
தீயிலே பொசுக்குதல்
முறையா.....
நச்சுக்காற்றை பரப்பி
குற்றச் சாட்டை எழுப்பி
குலம் அழிப்பது உந்தன்
உந்தன் சதியே....
புத்தன் காந்தி போலே
எங்கள் உத்தம அஷ்ரப்
வாழ்ந்தான்....
பொத்திப் பொத்தி
எம்மை எதிரிகள் நின்று
காத்தான்.....
இன்று இல்லையே
உங்கள் வாய்களை
சொல்லால் அடக்கிட
அவர் இல்லையே இல்லையே....
ஏய்... தோழா நம் தோழ்களில்,
தோழ்களில் பூமி பந்தை
தோரணமாக்கிட
வா தோழா......
எதிர் காலத்தை, காலத்தை
சாதகமாக்கிட
வா.... தோழா....
எம்மை அழித்திட
ரத்தம் குடித்திட
துள்ளுதல், துள்ளுதல்
ஏனோ தெரியவில்லையே...
இந்த மண் மேலே
நாம் பிறந்தேமே
சரி சமமாக நாம்
வாழ்வோமே.....
வாழ்வோமே....
உங்கள் தீ செயல்
எங்கள் தேகத்தை, தேகத்தை
மட்டுமே அழித்திட முடியும்
அகிம்சையை அழித்திட முடியாதே....
வா... தோழா....
நம் வாழ்க்கையை,
வாழ்க்கையை
ஒரு நந்தவனமாக்கி
நாம் விரைவோம்...
சாதி குப்பை, துசு தட்டி
சமரம் செய்வோமே....
வா..... தோழா....
No comments:
Post a Comment