Tuesday, January 29, 2019

நீயா நானா

பிறந்தோம் இறந்தோம்
என்பதற்கு நடுவில்
எத்தனை சூழ்ச்சுமங்கள்!

அத்தனையும் அலற
வைத்தும், நகர முடியாது
போன சிறையே, உலக வாழ்க்கை!

இதை உணராத உள்ளங்களில்
எத்தனை கரடு முரடான
சிந்தனைகள்!

நித்தமும், நித்தமும், இரத்தமே
கொப்பளித்து, உதிரத் துளி விழும்
இடத்திலே முகம் புதைக்க
எத்தனை, எத்தனை ஆவல்கள்!

மனிதம் தாண்டி எது உண்டு'
எதை அடைய இத்தனை
பிளவுகள், நாளை நீயோ....
நானோ.... உயிர் பிரிந்தால்
ஒரு சில நிமிடங்கள் மட்டுமே
உலகை வசித்திருப்போம்
பிணம் என்னும் பெயர் கொண்டு!

இத்தனையும் நிஜம் என்று
புரிந்தும் மாய மேடையில்
பேடை நாடகமும், நீளும் குரோதமும்
எதற்காக!

கோடிகளைக் குவிப்பதும், ஏழைகள்
தவிப்பதுமான விரு விரு போட்டியில்
வீதி நாய்கள் குரைப்பதும்
விரோதங்கள் சிரிப்பதும், பாவங்கள் அழுவதும், மொட்டுகள் சிதைவதும்
சொத்தெல்லாம் அழிவதுமாய்
பல வகை அரங்கேற்றம்!

யார் என்று பார்த்தால் எல்லாம்
உண்மைக்குப் புறமின்றி இரண்டே
ஜாதிதான், அந்த இரண்டு ஜாதிக்கோ
ஆஹ.... எத்தனை நீதி
எத்தனை சாதி, நீங்கள் வகுத்தது உங்களுக்கான சாதி அல்ல சதி
உணர மறுத்த உங்களால் முடிகிறது
உங்கள் விதி!


No comments:

Post a Comment