Friday, January 11, 2019
காதல் ரீங்காரம்
நூற்றாண்டின்
நொடிகள் வேண்டும்
நொடிகள் தோறும்
நீ வேண்டும்!
உன்னோடு கூடும்
முன்பு - நான்
தனிமையில்
கழித்த அந்த இழமைக்கும்
சேர்த்து இன்னொர்
ஜென்மம் வேண்டும்!
எந்தன் இழமையை
களவு கொண்ட
நரைகளும் கூட
நம் காதல் ரீங்காரம்
இசைக்க வேண்டும்!
உணவுப் பந்தியில்
குவித்து வைத்த
எண்ணக்கொள்ளாத
சோறுபோல்
பிரியாது பிணைந்திருக்க
வேண்டும்!
கவிப் பந்தியில்
களைந்தால் கூட
களையாத பொருள்
போல் கலந்திருக்க
வேண்டும்!
தனிமையில் கூட
நாம் மட்டும்
தனித்திருக்க வேண்டும்!
இனிமையில் என்றும்
எம் வாழ்வே எண்ணற்ற
இனிமை தரவேண்டும்!
ரேகைகள் கூட
தேயாத தேகம்
கொள்ள வேண்டும்
நம் தீராத காதல்
போல!
✍
ஷியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment