நதிக்கரை அலைகளை எதிர்
கொள்ளும் மணல் மேடுகளே
ரதி அழகினில் சிலிர்த்திடும்
சிலையென அழகாகுங்களேன்.....
அவள் வாசனைப் பூப்பந்தோ
என் வாசலில் மணச் செண்டோ
நான் ஈ எனச் சிறகசைக்க.....
நாணின அவள் வதனம்!
சூரிய சந்திர சூடுகள்
தணித்தொரு கீற்றினை
சுமந்திடு தென்றலே....
பளிங்கு மேனியில்
மினுங்கும் ஜீவன் தணிந்து
வலம் வரவே.....!
வானவில் கோடுகள்
தாரகை மேனியில்
வானவர் கண்களும்
களவு கற்கிறது....
இவள் வதனத்தை விழிகளால்
திருடிக் கொள்ள....!
இத்தனை எழிலும் மொத்தமாய்
இருக்க மற்றவர் பார்வை
திருட்டையே நெருங்க
இந்தப் பித்தனோ பக்த்தன்
ஆகிப் போவேனோ......!